சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புஷ்பா நகர் குடியிருப்பில் நாளை மறுநாள் அதாவது நவம்பர் 29ஆம் தேதி இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது. உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த இலவச முகாமில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சூளைமேடு எக்ஸ்னோரா தன்னார்வ அமைப்பு, அருணா சர்க்கரை நோய் சிகிச்சை மையம் ஆகியவை இணைந்து இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
முகாம் தினத்தறு காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர் ஏ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, நோய் குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த முகாமில் 110-ஆவது மாமன்ற உறுப்பினர் நுங்கை மாறன், எக்ஸ்னோரா அமைப்பின் செயலர் எஸ்.கஸ்தூரி ரங்கன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
English summary-Free diabetes screening camp is to be held at Chennai Nungambakkam Pushpa Nagar on 29th of this month.