CB06-WIF_GIUARG5J6_2499632fதமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது பொது இடங்களில் இலவச ‘வை-பை’ வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் இந்த வாக்குறுதி தற்போது நிறைவேறும் நிலைக்கு வந்துள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் இலவச ஐ-பை திட்டத்தை நிறைவேற்றும் பணிகளை தொடங்கி உள்ளது. செப்டம்பர் மாதத்தில் இலவச ‘வை-பை’ அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அரசு அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அரசு கேபிள் டி.வி. நிறுவனம் முதல் கட்டமாக 32 மாவட்டங்களில் உள்ள தலைநகரங்களில் இலவச ‘வை-பை’ வசதியை தொடங்க முடிவு செய்துள்ளது. பொதுமக்கள் கூடும் பஸ்நிலையம், பூங்காக்கள் மற்றும் அரசு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போன்ற இடங்களில் தொடங்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த ஏஜென்சிகளிடம் இருந்து டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதற்கான உபகரணங்கள், சர்வர், டேட்டா போன்றவற்றை வழங்கக்கூடிய ஏஜென்சிகளுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை செப்டம்பர் மாதம் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கான டெண்டர் ஆகஸ்டு 2-வது வாரத்தில் இறுதி செய்யப்படும் என்று நம்புகிறோம். இந்த திட்டம் மாவட்ட தலைநகரங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு அடுத்த ஆண்டுகளில் விரிவாக்கம் செய்யப்படும். இந்த திட்டத்தை பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்து மற்ற பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

இலவச வை-பை பொது மக்களுக்கு வழங்கப்படும். அதேவேளையில் சில கட்டுப்பாடுகளை அரசு கேபிள் நிறுவனம் விதிக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே வை-பை வசதி இலவசமாக கிடைக்கும். வை-பை வசதியை குறிப்பிட்ட ஒரே இடத்தில் இருந்து அதிகளவு பயன்படுத்தாதபடி இத்திட்டத்தை செயல்படுத்தவும் அதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டுள்ளது.

English Summary : Free Wi-Fi access in 32 districts since September. Organized by the Government of Tamil Nadu