முழு நேர கிளை நூலகங்களில் இலவச வைஃபை வசதி ஏற்பாடு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள 100 நூலகங்களில் வைஃபை (கம்பி இல்லாத அதி வேக இணையதள இணைப்பு) வசதி இலவசமாக ஏற்படுத்திதர தமிழக அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஏ.சி.டி என்ற நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங் கோட்டையன் முன்னிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தலைமை செயலகத்தில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
அதில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள நூலகங்கள் அனைத்துக்கும், 5 ஆண்டுகளுக்கு ஏ.சி.டி. நிறுவன சி.எஸ்.ஆர். பண்ட் மூலம் இலவசமாக வைஃபை வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், 100 நூலகங்களில் வாசகர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பயன்பெறுவர். மாணவர்கள், வாசகர்கள் நூலகத்தில் இருந்து, 50 மீட்டர் சுற்றளவுக்குள் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். மாணவர்கள் தங்களது மடிக்கணினி, கைபேசி உதவியுடன் இந்த இணைய தள வசதியைப் பெற்று, மின்நூல் கள், மின்னணு ஆய்விதழ்கள், உபயோகமான வலைதளங்கள் மூலம் வேண்டிய தகவல்களைப் பெறலாம்.
மாவட்டமைய நூலகர் மந்திரம் கூறும்போது, ‘‘காஞ்சிபுரம் மாவட்டத்தில், கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம், பகுதிநேர நூலகம் என 173 நூலகங்கள் உள்ளன. இதில், 13 நூலகங்களுக்கு வாசகர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்த ஏதுவாக, இந்த வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. தாம்பரத்தில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு வாசகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மாவட்டமைய நூலகத்தை திறன்மிகு நூலகமாக மாற்ற, அரசு சார்பில் 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ‘மேக்ஸ்டர்’ ஆப் மூலம், நுாலக வளாகத்துக்குள், இலவசமாக புத்தகங்களை பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த லிங்க் வசதியை பெற, 98118 69259 என்ற எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுத் தால் போதும். கூகுள் பிளே ஸ்டோ ரிலும் இச்செயலியைப் பதிவு செய்து கொள்ளலாம். மாவட்ட மைய நூலகம் சார்பில் போட்டி தேர்வு வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகிறது. மேலும் மாவட்டத்தில், ரூ. 3.5 கோடியில் நூலகங் களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படவுள்ளன” என்றார்.