கூகுள் நிறுவனம் ஏராளமான வசதிகளை பொது மக்களுக்க வழங்கி வருகின்றது. இதில் முக்கியமானதாக கருத்தப்படுவது கூகுள் மேப்ப ஆகும். இதை வைத்து தான் உலகமே இயங்கி வருகின்றது என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்றது கூகுள் மேப். இன்று நாம் செல்லும் இடங்களுக்கும் வழிகாட்டியாகவும் இருக்கின்றது. இதை பல்வேறு வர்த்தக நிறுவனகளும் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கூகுள் மேப் காட்சி காண முடிந்தாலும், நாம் செல்ல வேண்டிய இடத்தை தத்ரூபமாக வழிகாட்டும் புதிய வசதியை கூகுள் நிறுவனம் வழங்க இருக்கின்றது.
கூகுள் நிறுவனம்: இது வியாபார மையங்களுக்கு மிகுந்த பயனை வழங்கும் வகையில், கூகுள் மேப்ஸ் எனப்படும் வரைபடம் சாரந்த செயலில் குறுஞ்செய்தி அனுப்பிக் கொள்ளும் வசதியை அல்பாபெட் கீழ் இயங்கும் கூகுள் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.
வடிவமைப்பு: அவ்வப்போது பல்வேறு புதிய முயற்சிகளை செயற்படுத்தி வரும் கூகுள் நிறுவனம் ,புதிதாக கூகுள் மேப்ஸ் செயலியில் இணைக்கப்பட்டுள்ள குறுந்தகவல் அனுப்பும் வசதியானது. தனிநபர் பயன்பாட்டுக்கு என வழங்கப்படவில்லை. அதாவது தனிநபர்கள் வியாபர நிறுவனங்களை இலகுவாக மெசேஜ் மூலம் தொடர்பு வகையில் வடிவமைத்து இருந்தது.
டெல்லிக்கு சிறப்பு வசதி: சமீபத்தில் கூகுள் மேப்ஸ் செயலியில் டெல்லி வாசிகளுக்கு என பிரத்தியேகமாக ஆட்டோ ரிக்ஷா அம்சம் பொது பயணங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டது, இது பயனர்கள் தேடும் முகவரிக்கு செல்லும் நேரத்தை மேம்படுத்தும்.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: கூகுள் மேப்பின் ஆக்மென்டட் ரியாலிட்டி என்ற தத்ரூப வழிகாட்டி முறை விரைவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
சேவை மேம்பாடு: கூகுள் நிறுவனம் தனது சேவையை மேம்படுத்தி வருகின்றது. கடந்த 2018ம் ஆண்டு வெளியிட்ட முன்னோட்டத்தை விட மேம்படுத்திய வசதிகளுடன் விரைவில் ஆக்மென்ட்ட ரியாலிட்டி பதிப்பில் அப்டேட் வெளியிடப்பட வாய்ப்புள்ளது. அதில் கேம்களில் வருவது போன்று திரும்பும் திரை மிளிரும் வகையில் இருக்கும்.
கேமராவை ஆன் செய்து பயணிக்கலாம்: கேமராவை ஆன் செய்தபடியே பயணிக்கலாம் என்பதால் முன்னோ செல்லும் வாகனத்துக்கும் தங்கள் வாகனத்துக்கும் சுமார் எத்தனை அடி இடைவெளி என கணித்துக் கூறும்.
பீட்சா மேன் போல் அனிமேசன்: மேலும், போன்று திரையில் மட்டுமே கவனம் செலுத்தி சாலையில் நடக்க கூடாது என அறிவுறுத்தும். மேலும் உரிய இடத்தை எட்டியதும் குறியிட்டுக் காட்டும் அந்த பதிப்பில், வழி நடத்திச் செல்ல பீட்சா மேன் போல் அனிமேசன் பயன்படுத்தப்படுகிறது.