ஆன்லைன் முறையில் வரும் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து மூன்று நாட்களுக்குள் வில்லங்க சான்று வழங்க வேண்டும் என சார் – பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். பதிவுத்துறையில் பத்திரப்பதிவுகளை தொடர்ந்து வில்லங்க சான்று பிரதி ஆவணங்கள் உள்ளிட்ட சேவைகளுக்கான பதிவுகளை ஆன்லைன் முறையில் மேற்கொள்ளும் புதிய திட்டம் டிசம்பர், 10ல் துவக்கப்பட்டது.
இத்திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதை முன்னிட்டு சார் – பதிவாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன் பிறப்பித்துள்ள உத்தரவு
ஆன்லைன் முறையில் வில்லங்க சான்று கோரும் விண்ணப்பங்களுக்கு மூன்று நாட்களில் பதில் அளிக்க வேண்டும்
கணினிமயமாக்கப்பட்ட பத்திரப்பதிவு தொடர்பான வில்லங்க விபரங்களை மூன்று நாட்களிலும் மற்ற வில்லங்க விபரங்களை நான்கு நாட்களிலும் வழங்க வேண்டும்
சான்றிட்ட பிரதி ஆவண நகல் கோரினால், மூன்று நாட்களில் வழங்க வேண்டும்
ஆன்லைன் முறையில் விண்ணப்பம் பதிவான நாளை தவிர்த்து, இந்த காலவரையறை பின்பற்றப்பட வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.