குரூப்–2 மெயின் தேர்வின் முடிவை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு 26–ந்தேதி தொடங்குகிறது.
இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, வணிக வரித்துறை உதவி அதிகாரி, வருவாய் துறை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் காலியாக உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு குரூப்–2 முதல்நிலை தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடத்தியது.
அந்த தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் மெயின் தேர்வு எழுதினார். இத்தேர்வின் முடிவு நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில் 5 ஆயிரத்து 635 பேர் தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி அடைந்தவர்களின் நம்பர்களை இணையதளத்தில் (tnpsc.gov.in) வெளியிட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்பதர்காக மார்ச் 26-ந்தேதி அழைக்கப்பட்டுள்ளனர்.
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பின்னர் நேர்முகத்தேர்வுக்கு எத்தனை பணியிடங்கள் தேவையோ? அதற்கு 2 மடங்கு (1:2) என்ற விகிதத்தில் அழைக்கப்படுவார்கள். பின்னர் இறுதி முடிவு வெளியிடப்படும் என்று பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கும் திரு.பி.பாலசுப்ரமணியன் அறிவிப்பு வெளியிட்டார்.
English Summary: Group 2 Main Exams results announced yesterday evening. Certificate Verification’s are going to start from 26th March.