us19316இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்தும் அமெரிக்காவுக்கு பணிநிமித்தம் காரணமாக சென்று அங்கேயே தங்கிவிடும் பொதுமக்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. வருடக்கணக்கில் தங்கியிருப்பவர்கல் அமெரிக்க குடியுரிமை பெறவேண்டும் என்ற நிலையும் சிலசமயம் ஏற்படுகிறது. ஆனால் அமெரிக்க குடியுரிமை பெறாமலே அந்நாட்டில் தங்கி வேலை செய்ய வசதியாக எச்-1 பி விசாவை வழங்க அமெரிக்க அரசு தற்போது முடிவு செய்துள்ளது. எச்-1பி வேலை விசாவுக்கான விண்ணப்பங்கள் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளப்படும் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றத் துறை (யுஎஸ்சிஐஎஸ்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யுஎஸ்சிஐஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் எச்-1பி விசா விண்ணப்பம் பெற்றுக் கொள்ளப்படும். விநியோகம் தொடங்கிய முதல் 5 வர்த்தக தினங்களில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பங்களின் எண்ணிக்கை கண்காணிக்கப்பட்டு, உச்சவரம்பு எட்டப்பட்டவுடன் அது பற்றி பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

முதல் 5 வர்த்தக நாட்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்புக்கும் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால், கணினி உதவியுடன் குலுக்கல் முறையில் தேவையான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

முதல்கட்டமாக 65 ஆயிரம் பேர்களுக்கு இந்த எச்-1 பி விசா வழங்கப்பட்டாலும் இது தவிர முதுநிலை அல்லது உயர் பட்டங்கள் பெற்ற 20 ஆயிரம் பேர்களுக்கும் இந்த விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு இந்தியர்கள் பல நாட்டினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

English Summary: H1-B Visa from April 1. People Happy for United States Decision.