முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான இன்று ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், ஆசிரியரின் தனிச்சிறப்பை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பார்கள். நமக்கு அகரத்தை சொல்லித் தந்து ஆக்கத்தை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களுக்கு நன்றியும் அன்பும் செலுத்தும் நாள் இந்த நாள்.

குடும்பத்தை விட்டு ஒரு குழந்தை வெளியே சென்று சந்திப்பது முதலில் ஆசிரியரைத்தான். அவர் கற்றுக் கொடுக்கும் பண்பும், கல்வியும்தான் அக்குழந்தையை வாழ்நாள் முழுவதும் நெறிப்படுத்துகிறது. ஆசிரியர்களால்தான் மாணவர்களுக்கு கற்க கசடற கற்பவை என்பது புரிய வருகிறது.

ஆசிரியர்களுக்கு ஊதியம் தரப்பட்டாலும் அவர்களின் சேவை, அந்த ஊதியத்தைவிட பன்மடங்கு உயர்ந்தது. தங்கள் பணிக்காலம் மூப்படையும் முன், பல ஆயிரம் மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்குகின்றனர். சுருங்கச் சொன்னால் தேசத்தின் எதிர்காலத்தையே உருவாக்குபவர்கள் அவர்கள்தான்.

அறிவாற்றலை அள்ளித் தந்து, தங்களைப் பண்படுத்திய ஆசிரியர்களை ஒவ்வொருவரும் இன்னாளில் நினைவுகூர்வது, அவர்களுக்கு செலுத்தும் நன்றிக் கடனாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *