மாணவர்களின் கல்வியை மேம்படுத்த மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக கல்வி உதவித்தொகையை வழங்கிறது. மத்திய அரசின் இந்த கல்வி உதவித் தொகையை பெறும்போது மாணவர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பாட்டால் அந்த பிரச்னைகள் குறித்து புகார்களை மின்னஞ்சலில் தெரிவிக்கும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் நலிந்த பிரினர் உயர் கல்வி பெற கல்வி உதவித்தொகையை மத்திய அரசு வழங்கிவருகிறது. இவற்றைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள், குறைபாடுகள் குறித்த புகார்களை scholarships.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறை உள்ளது.
இந்த நிலையில், மத்தியப் பிரிவு கல்வித் தொகைகள் குறித்த புகார்களை schol-mhrd@gov.in என்ற மின்னஞ்சலுக்கும், ஏஐசிடிஇயின் கல்வி உதவித் தொகை தொடர்பான புகார்களை pgscholarship@aicte-india.org என்ற மின்னஞ்சலுக்கும், யுஜிசி கல்வி உதவித் தொகை தொடர்பான புகார்களை ugcfellowship@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மின்னஞ்சல் வசதியை மாணவர்கள் பயன்ன்படுத்தி தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைக தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
English Summary: Having Trouble to getting the Education Amount from Central Government? Introduction to e-mail facility for registering complaints.