தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதாலும், வெப்பச் சலனத்தாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதாலும், வெப்பச் சலனத்தாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும்.
வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவ கங்கை விருதுநகர், தேனி, திண்டுக் கல், மதுரை ஆகிய உள் மாவட் டங்களில் அனேக இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும்.