ithu namma aaluசிம்பு, நயன்தாரா நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படத்தின் மீதமுள்ள பாடல் காட்சியில் நடிக்க நயன்தாரா மறுத்துள்ளதாக டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளதை அடுத்து இந்த படத்தின் இயக்குனர் பாண்டியராஜ் இந்த பிரச்சனை குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “‘இது நம்ம ஆளு’ படத்தின் படப்பிடிப்பு உண்மையில் முடிந்துவிட்டது. இந்த படத்தை அடுத்த வாரமே கூட ரிலீஸ் செய்யலாம். ஆனால் சிம்புவும், டி.ராஜெந்தரும் இந்த படத்தில் ஒரு குத்து பாடல் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த பாடலின் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டது.

இந்த பாடலில் டி.ராஜேந்தர், சிம்பு, குரளரசன் மற்றும் நயன்தாரா ஆடும் வகையில் படமாக்க திட்டமிட்ட நிலையில் இந்த பாடல் காட்சிகாக நயன்தாரா 8 முறை கால்ஷீட் கொடுத்து விட்டார். ஆனால் பல்வேறு காரணங்களால் அனைத்து கால்ஷீட்டையும் சிம்புவும் டி.ராஜேந்தரும் வீணடித்துவிட்டனர். இதனால் படத்தின் கதை மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் இந்த பாடல் இல்லாமலேயே படத்தை நல்ல முறையில் வெளியிடுமாறும் நயன்தாரா கூறிவிட்டு, அடுத்தடுத்த படங்களில் பிசியாகிவிட்டார்.

இந்த படத்தின் கதைப்படி குத்துப்பாட்டு அவசியமில்லை. இருந்தும் தயாரிப்பாளரின் விருப்பத்திற்கு இணங்க அப்படி ஒரு பாடலை எடுக்க ஒப்புக்கொண்டேன். இந்த படத்தில் நயன்தாரா நடிக்க வேண்டிய காட்சிகளை 25 நாட்களில் சரியாக நடித்து கொடுத்து விட்டார். இந்த பாடலுக்காக அவர் கொடுத்த கால்ஷீட்டை வீணடித்துவிட்டு அவர் மீது குற்றம் சொல்வதில் எவ்வித நியாயமும் இல்லை. எனவே இந்த பாடல் காட்சி இல்லாமலேயே படத்தை வெளியிட டி.ராஜேந்தர் முன்வரவேண்டும் என்று பாண்டியராஜ் கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

English Summary:Idhu Namma Aalu,the movie publish next week. Director pantiyaraj.