சென்னை: 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தமிழக அரசு பிறப்பித்திருக்கும் தடை உத்தரவு நாளை முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.
இதைதொடர்ந்து நாளை முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்கள் உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ் டிக் உறிஞ்சி குழல், பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி உள்பட 14 பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார்.
அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை தவிர்க்கவும், கடைகள், உணவகங்கள், விற்பனையாளர், காய்கறிச்சந்தை உள்ளிட்ட பிற இடங்களில் பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்ய வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை ஆகிய துறைகளில் இருந்து மூவர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் உத்தரவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், அதிகாரிகளின் இதுபோன்ற நடவடிக்கையால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.