நமது புதுயுகம் தொலைக்காட்சி மட்டுமே எதிர்கால இந்தியா குழந்தைகளின் கையில் என்பதை உணர்ந்து, அவர்களின் வளர்ச்சி மிக சக்தி வாய்ந்ததாக அமைய வேண்டும் என்ற நோக்கிலும், குழந்தைகள் படிப்பு, விளையாட்டுகளில் மட்டுமல்லாது சமூக அக்கறையும் அது பற்றிய சிந்தனைகளையும் ஏற்படுத்தி, வருங்காலங்களில் ஒரு பண்புள்ள மனிதராக, நேர்மையான அதிகாரிகளாக, தலைசிறந்த தலைவர்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இளம் படை நிகழ்ச்சியை தயாரித்து வழங்கி வருகிறோம்.
மரக்கன்றுகளை வளர்த்தல், குப்பையை தரம்பிரிக்க வலியுருத்தல், குடியிருப்பு பகுதி அடிப்ப்டைப் பிரச்சினைகளை புகார் அளித்தலோடு இளம்படை வீரர்கள் மை ஊற்றி எழுதும் ink Pen பயன்பாட்டை வலியுறுத்தி தாங்களும் மாறிவருகின்றனர்.
இளம்படை குழு பல அரசு மற்றும் தனியார் பள்ளியில் உருவாக்கி வாரந்தோறும் Zoom செயலி மூலம் சமூக சிந்தனை கொண்ட பலரை விருந்தினர்களாக வரவழைத்து இளம் படை வீரர்கள் அனைவருக்கும் பயிற்சியளித்து வருகிறது….!
இதன் மூலம் இளம் படை வீரர்கள் (குழந்தைகள்)அனைவரும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தாங்களே முன்னின்று தீர்வு காணும் வகையில் உருவாக்கப்படுகிறார்கள்.
புதுயுகம் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிறு காலை 10.30 மணிக்கு இளம்படை மூலம் குழந்தைகளின் திறமையை சமூக பொறுப்பான நிகழ்வாக இனி காணலாம்!