புதுடெல்லி: மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகித புள்ளிவிவரங்களின் படி கடந்த 2 நிதியாண்டுகளில் வளர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு முதல் கவனித்தால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து 2017-18 ம் ஆண்டில் 7 புள்ளி 2 என வளர்ச்சி விகிதம் சாத்தியப்பட்டு உள்ளது. இந்த புதிய தகவல் பிரதமர் மோடி அரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது.