ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா – ஹாங் காங் அணிகள் இன்று மோதின. இதில் இந்தியா 26-0 வெற்றி பெற்றது.
இதற்கு முன் இந்தியா 1932-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் அமெரிக்காவை இந்தியா 24-1 என வீழ்த்தியிருந்தது. அதுதான் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. தற்போது 86 ஆண்டுகள் கழித்து இந்தியா அதிக கோல்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளது.
ருபிந்தர் பால் சிங் ஐந்து கோல்களும், ஹர்மன்ப்ரீத் சிங் நான்கு கோல்களும், ஆகாஷ்தீப் சிங் மூன்று கோல்களும் அடித்தனர். இதற்கு முன் இந்தோனேசியாவை 17-0 என வீழ்த்தியிரந்தது குறிப்பிடத்தக்கது.