asiacup73கடந்த சில நாட்களாக வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேச மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் கலந்து கொண்டன. இந்த போட்டியில் லீக் ஆட்டத்தில் ஒரு தோல்வியும் அடையாத இந்திய அணியும், ஒரே ஒரு தோல்வியை மட்டும் அடைந்த வங்கதேச அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. பாகிஸ்தானும், இலங்கையும் போட்டியை விட்டு வெளியேறின.

இந்நிலையில் நேற்று ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். மழை காரணமாக இந்த போட்டி 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.

இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களில் 120 ரன்கள் எடுத்தது. 121 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி முதலிலேயே ரோஹித் சர்மாவின் விக்கெட்டை இழந்தாலும், பின்னர் விராத்கோஹ்லி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர்களின் பொறுப்பான ஆட்டத்தால் வெற்றி இலக்கை நோக்கி எளிதாக நகர்ந்தது.

கடைசி நேரத்தில் களமிறங்கிய கேப்டன் தோனி 12 பந்துகளுக்கு 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தபோது, இரண்டு மெகா சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து 13.5வது ஓவரிலேயே வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற உதவினார்.ஷிகர் தவான் 60 ரன்களும், விராத் கோஹ்லி 41 ரன்களும், தோனி 6 பந்துகளில் 20 ரன்களும் எடுத்தனர். 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக ஷிகர் தவானும், தொடர் நாயகனாக வங்கதேச வீரர் சபீர் ரஹ்மானும் தேர்வு செய்யப்பட்டனர்.

English Summary: India Won the Asia Cup against Bangaladesh.