002இந்தியாவின் முன்னணி அரசு வங்கிகளில் ஒன்றாகிய இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல சிறப்பு சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் தற்போது புதியதாக ஐந்து திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஏ.டி.எம். அட்டையை பயன்படுத்தி வழக்கத்தைக் காட்டிலும் கூடுதல் தொகையை எடுப்பதற்காக ‘ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு’ அறிமும் செய்துள்ளது. இந்த டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு பெரும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஏ.டி.எம். அட்டைகளில் பின்னணி காட்சிகளை அமைத்துக்கொள்வதற்காக ‘கஸ்டமைஸ்டு இமேஜ் கார்டு’ மற்றும் ஏ.டி.எம். அட்டையின் ‘பின்’ எண்ணை செல்போன் மூலம் மாற்றிக்கொள்ளும் ‘கிரீன் பின்’ திட்டத்தை கொண்டு வந்துள்ளது. மேலும் ‘நெட் பாங்கிங்’ முறையில் காசோலையின் விவரங்களை பார்த்துக்கொள்ளும் வகையில் ‘காசோலையை காணும் வசதி’, மற்றும் இந்தியன் வங்கி ஊழியர்களின் பயன்பாட்டுக்காக ‘ஐபி ஸ்டாப் ஆப்’ என்ற மொபைல் ஆப் ஆகிய 5 வசதியும் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த அறிமுக நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மகேஷ் குமார் ஜெயின், செயல் இயக்குனர்கள் ஆர்.சுப்பிரமணியகுமார், ஏ.எஸ்.ராஷீவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
English Summary :Indian Bank has introduced 5 new schemes