உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகிய இந்தியன் ரயில்வே அவ்வப்போது பயணிகளுக்கு பலவித சலுகைகளையும், பயணத்திற்கான வசதிகளையும் செய்து வருகிறது. அதே நேரத்தில் ரயிலில் சுகாதாரக்கேடு இருப்பதாகவும் அவ்வப்போது புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நாட்டின் சுத்தமான மற்றும் அசுத்தமான ரெயில் நிலையங்கள் குறித்து அண்மையில் 1 லட்சத்து 30 ஆயிரம் பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. நாட்டில் உள்ள 407 பெரிய ரெயில் நிலையங்கள் இதற்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில்
இந்நிலையில் இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் சுத்தமான, மற்றும் அசுத்தமான ரயில் நிலையங்கள் குறித்த ஒரு கருத்துக்கணிப்பை சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் எடுத்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் 407 பெரிய ரயில் நிலையங்கள் மட்டும் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது. சுமார் 1.3 லட்சம் மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி சிறந்த 10 ரெயில் நிலையங்களாக பயணிகள் தேர்வு செய்த ரயில் நிலையங்களின் பட்டியல் பின்வருமாறு:-
1.பியாஸ், 2.காந்திதாம், 3.வாஸ்கோடா காமா, 4.ஜாம்நகர், 5.கும்பகோணம், 6.சூரத், 7.நாசிக்ரோடு, 8.ராஜ்கோட், 9.சேலம், 10.அங்லேஷ்வர். இவற்றில் காந்திதாம், ஜாம்நகர், சூரத், ராஜ்கோட், அங்லேஷ்வர் ஆகிய 5 ரெயில் நிலையங்கள் குஜராத் மாநிலத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் மிகவும் அசுத்தமான ரெயில் நிலையங்களில் பீகார் மாநிலத்தில் உள்ள மதுபானி முதலிடம் பிடித்து இருக்கிறது. 2வது இடத்தில் உ.பி மாநிலத்தில் உள்ள பாலியா, 3வது இடத்தில் பிகாரில் உள்ள பக்தியார்பூர் 4வது இடத்தில் கர்நாடகாவை சேர்ந்த ராய்ச்சூர் மற்றும் 5வது இடத்தில் உள்ளது.
English Summary:India’s clean 10 train stations in Salem and Kumbakonam