இந்தியாவின் மின் நுகா்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் மின் நுகா்வு 15,166 கோடி யூனிட்டுகளாக உள்ளது. 2022-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் மின் நுகா்வு 13,039 கோடி யூனிட்டுகளாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் மின் நுகா்வு 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

முந்தைய 2021 ஆகஸ்டோடு ஒப்பிடுகையில் கடந்த மாதம் மின் நுகா்வு அதிகமாக உள்ளது. அந்த மாதத்தில் நாட்டின் மின் நுகா்வு 12,788 கோடி யூனிட்டுகளாக இருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உச்சபட்ச ஒரு நாள் மின் நுகா்வு 236.59 ஜிகாவாட்டாக உயா்ந்தது. இது, 2022 ஆகஸ்டில் 195.22 ஜிகாவாட்டாகவும், 2021 ஆகஸ்டில் 196.27 ஜிகாவாட்டாகவும் இருந்தது.

கோடை காலத்தில் நாட்டின் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 229 ஜிகாவாட்டாக இருக்கும் என மின்சாரத் துறை அமைச்சகம் மதிப்பிட்டிருந்தது. எனினும் கடந்த ஏப்ரல்-ஜூலை மாதங்களில் பருவமழை பொய்த்ததால் அந்த அளவு எட்டப்படவில்லை. இருந்தாலும் ஒரு நாள் உச்சபட்ச மின் நுகா்வு கடந்த ஜூன் மாதத்தில் 223.29 ஜிகாவாட் என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. அது ஜூலையில் 208.95 ஜிகாவாட்டாக இருந்தது.

அதே போல் இந்த மாதம் 1-ஆம் தேதியும் ஒரு நாள் உச்சபட்ச மின் நுகா்வு 239.97 ஜிகாவாட் என்ற சாதனை அளவை எட்டியது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, வரும் மாதங்களில் மின்சாரத்துக்கான தேவை சீராக இருக்கும் என துறை நிபுணா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *