இந்தியாவில் பெருகி வரும் கிட்டப்பார்வை குறை பாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவும் தற்போதைய நவீன மருத்துவ சிகிச்சைகள், குறித்து விவாதிப்பதற்கான சர்வதே கண் மருத்துவ நிபுணர்களின் மாநாடு ஒன்றை சங்க நேத்ராலாயாவின் ‘எலீட் ஸ்கூல் ஆஃப் ஆட் டோ மேட்ரி’ அமைப்பு நடத்துகிறது. சர்வதேச கண் மருத்துவ நிபுணர்கள் மாநாடு இன்று அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த மாநாடு நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையால் நிர்வாகம் செய்யப்படும் எலைட் கண் மருத்துவக் கல்லூரி சார்பில் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள ஹோட்டல் கான்ஃப்ளூயன்ஸ் என்ற இடத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடு குறித்து கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர்.கிருஷ்ணகுமார் அவர்கள் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: இந்த மாநாட்டில் சிறுவர்களுக்கு ஏற்படும் கிட்டப்பார்வை குறைபாடு, சாலை விபத்துகளால் ஏற்படும் பார்வை குறைபாடு, கண்ணாடி அணிவது தொடர்பான பிரச்னைகள், கண் மருத்துவ ஆராய்ச்சிகள்- கண்டுபிடிப்புகள் ஆகிய நான்கு கருப்பொருள் குறித்து விவாதங்கள் நடைபெறும்.

குழந்தைகள் மற்றும் வயது வந்த இளம் பருவத்தினர்கள் படிக்கும் காலத்தில் அடிக்கடி சோர்வடைந்து விடுகின்றனர். ஒந்தப் பிரச்சினைக்கு உரிய காரணத்தை பரிசோதனை மூலம் கண்டறியாமல் விடுவதால் பின்னாளில் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு சாதாரணமாக ஓய்வெடுப்பதன் மூலமும் மற்றும் உரிய கண் கண்ணாடி அணிவதன் மூலமும் தீர்வு காணலாம். இதுபோன்ற நிலைகளை பல நோயாளிகள் இருவிழிப்பார்வை அல்லது ஒளிக்கற்றை சிதைவுறுதல் காரணமாக எதிர்கொள்ள நேரிடுகிறது.

கண் சுகாதாரம் பற்றி பார்க்கப்படாத விஷயங்கள் பற்றியும் கண் பயிற்சிகள் மூலம் குணப்படுத்தக்கூடிய தொழில் சம்பந்தப்பட்ட பார்வைக் கோளாறுகள் மற்றும் ஒளிக்கதிர்வீச்சு சிதைவுறு குறைகள் குறித்தும் இம்மாநாட்டில் விவாதிக்கப்படும்.

2015ஆம் ஆண்டை சர்வதேச ஒளி ஆண்டாக கொண்டாடப்பட வேண்டும் என்ற யுனெஸ்கோவின் அறிவிப்பை அடுத்து ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை “இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வருதல்” என்ற பொருளில் 3ஆவது ஆண்டு ESo’S சர்வதேச பார்வை அறிவியல் மற்றும் பார்வைத்திறன் அளவியல் மாநாடு EVIOC-2015 சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவ ஆய்வு அரங்கில் நடத்துகிறோம்.

இம்மாநாட்டில் இங்கிலாந்து உல்ஸ்டர் பல்கலைக்கழகம் பேராசிரியர் மேஜெலி, மற்றும் முன்னோடி கண்சிகிச்சை ஆராய்ச்சியாளர் டாக்டர் வில்லியம், ஜெ.பெஞ்சமன் போன்ற பார்வை அறிவியல் மற்றும் மருத்துவ சிகிச்சை அறிவியல் வல்லுனர்கள் பங்கேற்று வாதம் நடத்துவதுடன் தங்கள் அறிவாற்றலையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வார்கள்

இவ்வாறு டாக்டர் ஆர்.கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

English Summary : International Eye doctors conference starts today August 14th to August 16th.