bharathgas27116சமையல் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்ய ஆன்லைன் முறை ஏற்கனவே நடைபெறையில் இருந்தாலும் எரிவாயு சிலிண்டருக்கான தொகையை எரிவாயு சிலிண்டரை பெறும்போது தான் வாடிக்கையாளர்கள் தற்போது செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான தொகையை இனி ஆன்லைனில் செலுத்துவதற்கானத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

பணமில்லா நடவடிக்கையை கவனத்தில் கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தொகையை ஆன்லைனில் செலுத்துவதற்கானத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்துக்கான முன்பதிவு முறை ஏற்கெனவே ஆன்லைன் வழியாக அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், விநியோகிப்பட்ட பிறகே பணம் செலுத்த முடியும் என்ற நிலையே இருந்தது.

இந்த நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் திட்டத்தை ஜனவரி 24 முதல் தொடக்கி வைத்துள்ளார். இனி நாடு முழுவதும் தற்போது 16.5 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்களும் இந்தப் புதிய நடைமுறையின் மூலம் மிகுந்த பயனடைவார்கள் என்றும் இந்த நடைமுறையின் மூலம், வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. எரிவாயு சிலிண்டருக்கான தொகையை ஆன்லைனில் செலுத்த www.mylpg.in என்ற இணையதளத்திற்கு சென்று இந்த வசதியை பெறலாம். இணையதள வசதி உள்ளவர்கள் இந்த புதிய நடைமுறையை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

English Summary: Introducing the new facility of paying online cooking gas cylinder.