தொழிற்சாலை நடத்தி வரும் உரிமையாளர்கள் தங்களது வருடாந்திர தொழிலாளர்கள் குறித்த கணக்கு விவரங்களை ‘ஆன்-லைன்’ மூலம் தாக்கல் செய்வதற்கான புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னையில் உள்ள மத்திய துணை தலைமை தொழிலாளர் ஆணையர் பி.எம்.ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தொழிலாளர் சட்டத்தின் 14 விதிகளின் கீழ் ஒரு தொழிற்சாலையின் உரிமையாளர் ஆண்டுதோறும் தனது நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் குறித்த கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். தற்போது, இந்த ஒவ்வொரு விவரங்களை தாக்கல் செய்ய ஒவ்வொரு படிவத்தைப் பயன்படுத்த வேண்டி உள்ளது. இந்நிலையில், இந்த விவரங்கள் அனைத்தும் ஒரே படிவம் கொண்டு ‘ஆன்-லைன்’ மூலம் தாக்கல் செய்வதற்கான புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ‘ஷ்ரம் சுவிதா’ என்ற வெப் போர்டல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலை உரிமையாளர்கள் https://www.efilelabourreturn.
மேலும், தொழிலாளர்களும் இந்த இணையதளத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். அவர்களுக்கு ஒரு அடையாள எண் வழங்கப்படும். இதன் மூலம், அவர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அது குறித்து புகார் அளிக்கலாம். மேலும், தொழிலாளர்கள் தங்களது பி.எப். கணக்கு குறித்த விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்’ என்று கூறினார்.
English Summary: Introducing the new facility that is filed by the workers’ details online.