ஊழியர்களின் பி.எஃப். தொகை சர்வதேச அக்கவுண்ட் நம்பர் (யு.ஏ.என்.) கணக்கில் சேமிக்கப்படும். பெரும்பாலான நிறுவனங்களில் ஊதியம் வாங்கும் ஊழியர்களுக்கு இ.பி.எஃப். சலுகை வழங்கப்படுகிறது. இது அவர்களுக்கு வரி சேமிப்பு மற்றும் நீண்ட நாள் சேமிப்பு தொகையாக இருக்கிறது.
பல்வேறு ஊழியர்களுக்கு பி.எஃப். டெபாசிட் பற்றிய விவரங்களை அறிந்திருந்தாலும், இந்த தொகை எங்கிருக்கிறது என்றும் இதனை எவ்வாறு இயக்க வேண்டும் என்பது பற்றிய விவரங்களும் தெரிந்திருப்பதில்லை. பி.எஃப். அக்கவுண்ட் பேலெண்ஸ் தொகையை அறிந்து கொள்ள பயனர்கள் தங்களது யு.ஏ.என். ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
யு.ஏ.என். ஆக்டிவேட் செய்வது எளிய விஷயம் தான். நீங்கள் ஏற்கனழே யு.ஏ.என். ஆக்டிவேட் செய்திருந்தால், உங்களால் பி.எஃப். அக்கவுண்ட் பேலெண்ஸ் தொகையை அறிந்து கொள்ள முடியும்.
யு.ஏ.என். கண்டறிவது எப்படி?
யு.ஏ.என். உங்களது பே ஸ்லிப்பில் இடம்பெற்றிருக்கும். ஒருவேளை இங்கு இடம்பெறவில்லை எனில் உங்களது நிதி துறை அதிகாரியை தொடர்பு கொண்டு யு.ஏ.என். விவரங்களை பெற்று கொள்ளலாம். இது பி.எஃப். பிடித்தம் செய்யப்படும் ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
யு.ஏ.என். ஆக்டிவேட் செய்வது எப்படி?
இதுவரை நீங்கள் பி.எஃப். பேலெண்ஸ் சரிபார்க்கவில்லை எனில், கீழே வரும் வழிமுறைகளை பின்பற்றி யு.ஏ.என். ஆக்டிவேட் செய்யலாம்.
1 – முதலில் EPFO வலைதளம் சென்று Activate UAN பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
2 – இனி உங்களது UAN, பெயர், பிறந்த தேதி, மொபைல் நம்பர் மற்றும் கேப்ச்சா உள்ளிட்டவற்றை பதிவு செய்து Get Authorization Pin ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
3 – இனி உங்களது மொபைல் நம்பருக்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் (ஓ.டி.பி.) வரும். அதனை காப்பி செய்ய வேண்டும்.
4 – அடுத்து EPFO பக்கத்தில் அனைத்து விவரங்களையும் வெரிஃபை செய்து I Agree செக்பாக்ஸ்-ஐ க்ளிக் செய்ய வேண்டும்.
5 – உங்களது மொபைல் நம்பருக்கு வந்த ஓ.டி.பி. எண்ணை Enter OTP பகுதியில் பேஸ்ட் செய்து Validate OTP and Activate UAN ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்யும் போது உங்களது யு.ஏ.என். ஆக்டிவேட் ஆகி பாஸ்வேர்டு உங்களது மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும். இனி ஆறு மணி நேரங்கள் காத்திருந்து EPFO போர்டல் மூலம் பி.எஃப். பேலெண்ஸ் சரிபார்க்க வேண்டும்.