சென்னை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தற்போது தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை வலுப்பெறும்.காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதனால் தமிழகத்தில் கனமழை பெய்யும்.
எங்கு கனமழை: இதனால் நாளையில் இருந்து மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது . முக்கியமாக சென்னையில் இதனால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் இதனால் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
புயலாக மாறும்: இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக மாறிய பின் மேலும் வலுப்பெறும். அப்படி வலுப்பெறும் நிலையில், தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறும். வரும் 12ம் தேதி இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.
பேய்ட்டி புயல்: இந்த புயல் வரும் 13ம் தேதி தீவிர புயலாக வலு பெற வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்து உள்ளது. இந்த புயலுக்கு பேய்ட்டி என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. பேய்ட்டி புயலுக்கான பெயரை தாய்லாந்து வைத்தது.
சென்னையை நோக்கி: இந்த புயல் சென்னையை நோக்கி வர வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி 16ம் தேதி இந்த புயல் வலுப்பெறும் பட்சத்தில் சென்னையை நோக்கித்தான் நகர்ந்து வரும். சென்னைக்கும் விசாகபட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.