nila-vilakkuவிளக்கேற்றுவது ஏன் ?

நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளகேற்றுகிறோம்!
விளக்கு எரிந்த வீடு வீணாகிப் போகாது’ என்று ஒரு பழமொழி உள்ளது.

எதற்கு என்று தெரியுமா??

சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை (நெகட்டிவ் எனர்ஜியை) ஈர்க்கும் ஷக்தி குண்டு! அவ்வாறு ஈர்க்கும் போது! நம்மை சுற்றி பொசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும் நம் சுற்று புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்!

இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தாலே அது புரியும் ஏதோ வீடே மாயணம் போல் தோன்றும் எல்லாருமே சோர்வாய் இருப்பார்கள்! இதுவே விளகேற்றுவதன் தத்துவம்!

நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது.

அதே போல் மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற, தூய்மையடைந்து நற்பலனை அடைகின்றன. நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரிய நாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாகக் கருதப்படுகின்றன. சூரிய நாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திர நாடி, குளுமையைத் தருகிறது.

சுஷம்னா நாடி, அந்தப் பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு, ஆன்மீகப் பாதையை வகுக்கிறது.

நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரிய நாடி, சுறுசுறுப்பு அடைகிறது. நெய்விளக்கு, சுஷம்னா நாடியைத் தூண்டிவிட உதவுகிறது. பொதுவாகவே நெய் தீபம், சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலனையும் தருகிறது.

திருவிளக்கை எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை. ஆனால், பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு. இதை கருக்கல் நேரம் என்பர்.

சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுச்சூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்ப்பிருக்கிறது. ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டு போகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகிறோம் என்பது அறிவியல் உண்மை.

ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது….

அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய் சாயந்திரங்களில் தன் மகனும், மகளும் தாமதமாக வீடு சேர்வதை பார்க்கிறார். இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். ஒரு நாள் மகன் முன்னதாகவும், ஒரு நாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள். அவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை.

இருவரையும் ஒரு சேர பார்க்க முடிவதில்லை அந்த தாய்க்கு. ஒரு்வர் வருவதற்குள் மற்றொருவர் தூங்கியே போயிருப்பார். ஒரு நாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க
“உனக்கு இதெல்லாம் புரியாதம்மா. எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!!! இருவரும் கவுன்சிலிங் போய் வருகிறோம். ஒரு மணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம். மிகச் சிறந்த மருத்துவர் அவர். எல்லாம் சரியாகி விடும்” என்று சொல்ல நாளை அந்த மருத்துவரை பார்க்க போகவேண்டாமென்றும் சீ்க்கிரம் வீட்டுக்கு வரவேண்டுமென்றும் தாயார் சொல்கிறார்.

அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் இருவரின் மூக்கையும் சுகந்த மணம் துளைக்கிறது.

கைகால் கழுவி, உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு சொல்ல அங்கே செல்கின்றனர் இருவரும்.

மணம் வீசும் மலர்களின் வாசம்…
அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்று நேரம் அமரச் சொல்கிறார். தாமாகவே கண் மூடி அந்தச் சூழலின்
இன்பத்தை அனுபவிக்கின்றனர் இருவரும்.

கண் திறந்த போது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாகச் சொல்ல… தாயார் மகிழ்ந்தார்……

குறிப்பு:
********

மெழுகுவர்த்தி ஏற்றக் கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும் ! ஆஸ்துமா, மார்புபுத்துநோய் இவைகளுக்கு மெழுகுவத்திதான் தாய் ! மண்ணெண்ணை விளக்கும் வேண்டாம்….

வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால்
அவர்களை தினசரி விளக்கேற்றும்பட
ி கேட்டுக்கொள்ளவேண்டும்.

இப்படி செய்தால்
அவர்களின் முகப் பொலிவு பன்மடங்கு
கூடும்’ பலருக்கும் பயனுள்ள உபயோகமான
தகவல் என்பதால், அதை இங்கு தனி பதிவாக
தந்திருக்கிறேன். மேலும் விளக்கேற்றுவதற்கு
எந்தெந்த எண்ணைகளை பயன்படுத்தலாம்,
எதை பயன்படுத்தக்கூடாது,
என்ன திரிகளுக்கு என்ன பலன், எந்த நேரத்தில்
எந்த திசையில் ஏற்றவேண்டும்,போன்ற
தகவல்களையும் மேலும் விளக்கேற்றுவது
குறித்த வேறு பல தகவல்களையும் திரட்டி
எனக்கு தெரிந்த தகவல்களையும் சேர்த்து
தந்திருக்கிறேன். நிச்சயம் பயனுள்ளதாக
இருக்கும் என்று நம்புகிறேன்.

பெண் குழந்தைகள் விளக்கேற்றுவதால்
அவர்களின் முகப்பொலிவு கூடும்
நம் வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை
அவர்களது தாய்மார்கள் தினமும் விளக்கு
ஏற்றும்படி பணிக்க வேண்டும்.

இதில் அவர்களின் இறை பணி மட்டுமில்லாமல்
அவர்களின் தேஜசும் (அதாவது
முகபொலிவும்) கூடுகிறது.

இதை சோதிக்க விரும்பினால், தாய்மார்கள் தங்கள் பெண்ணை ஒரு குறிப்பிட்ட
தினத்திலிருந்து விளக்கு ஏற்றும்படி
சொல்லுங்கள். அன்று தங்கள் பெண்ணிடம

அவளது முக பொலிவை முகம் பார்க்கும்
கண்ணாடியில் பார்க்க சொல்லுங்கள். நீங்களும்
பாருங்கள். அன்றைய தேதியை கண்ணாடியின்
மூலையில் குறித்து வையுங்கள்.

சரியாக 30 நாட்கள் (இதில் வயது வந்த பெண்களின் இயற்கையான உபாதை நாட்களை
கணக்கில் கொள்ளாதீர்கள்) கழித்து, மீண்டும்
உங்கள் பெண்ணை கண்ணாடியில் அவளது
முகபொலிவினை பார்க்க சொல்லுங்கள்.

நீங்களும் பாருங்கள். மீண்டும் 45 வது நாள்
இதேபோல் பாருங்கள். நிச்சயமாக ஒரு
மாற்றத்தை உங்களால், உங்கள் பெண்ணால்
உணர முடியும். அதுமட்டுமின்றி
பெற்றோர்களின் ஆதரவும் அரவணைப்பும்
வியப்பூட்டும் வகையில் கூடும்

விளக்கேற்றவேண்டிய நேரம்
************************

விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்குச்
சற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’
என்கின்ற இரவின் விடியலாகத் திகழும்
அருணம், என்கின்ற அருணோதய காலத்தில்
விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித
யோகத்தையும் பெறலாம்.

அதேபோல்
மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று
முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற
உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி
வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் பெருகும்.

சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு
நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம்
உண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும்.

மற்றும் எல்லாவிதமான யோக பாக்கியங்களும்
பெறலாம்.

பொதுவான விதிமுறைகள்
***********************

1. விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை
திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும்
ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு
திரிகளாவது ஏற்ற வேண்டும்.

2. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி
குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு
பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

3. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில்
விளக்கில் நெய் அல்லது எண்ணெய்
ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு
தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக
ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை
அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர்
அனைவரின் மன இருளையும் அகற்றி,
தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த
முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான
அமைதியைத் தரும்.

4. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது
நலம்.

5. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை
நோக்கி ஏற்றவும்
நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு
உண்டான பலன்களை அடையலாம்.

6. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும்.
வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை
கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.

7. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின்
கலங்கரை விளக்கு. மங்களம் தங்கவும் இன்பம்
பெருகவும் தீபம் ஏற்றுவோம். தீபமேற்றி
என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம்
காண்போம்

எந்தெந்த எண்ணைகளில்
விளக்கேற்றினால் என்னென்ன பலன்கள் ?
*****************************************

நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித
சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும்.

நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப்
படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும்.

விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும் வேப்ப எண்ணெய்,
நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து
தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும். நெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், தேங்காய்
எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை
வணங்கினால் தேவியின் அருள் கிட்டும். கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு
நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.

கணவன்-மனைவி உறவு நலம் பெறவும் வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது. அவரவர்கள்
தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும்
பெறவழி செய்வது ஆமணக்கு எண்ணெய் தீபம்.

எள் எண்ணெய் (நல்லெண்ணை) தீபம் என்றுமே
ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களை
திருப்தி செய்யவும் ஏற்றது. மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர்
வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற
வேண்டும். மந்திரசித்தி பெற வேண்டுவோர்
விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய்,
நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் ஆகிய
ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.

கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும்.

முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவ
து நல்லது.

நாராயணனுக்கு நல்லெண்ணெய்
ஏற்றதாகும்.

மகாலட்சுமிக்கு நெய்
உபயோகப்படுத்தலாம்.

சர்வ தேவதைகளுக்கு
நல்லெண்ணெய் உகந்தது.

குலதெய்வத்திற்கு
இலுப்பை எண்ணெய், நெய் மற்றும்
நல்லெண்ணெய் இவை மூன்றும்
உபயோகிக்கலாம்.

கடலை எண்ணெய், கடுகு
எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக்
கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே
கூடாது. திசைகள் கிழக்கு-இந்தத் திசையில்
தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும்.

வீட்டில் உள்ள பீடைகள் அகலும். மேற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன்
தொல்லை, சனிபீடை, கிரகதோஷம்
பங்களிப்பதை இவை நீங்கும்.

வடக்கு-இந்தத்
திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும்,
மங்கலமும் பெருகும்.

தெற்கு-இந்தத்
திசையில் தீபம் ஏற்றக்கூடாது.

என்னென்ன திரிகள் பயன்படுத்தலாம்?
*****************************
************

தாமரைப்பூத்தண்டின் திரி: தாமரைப்
பூத்தண்டின் உள்பகுதியில் காணப்படும்
வெண்மை கலந்த பகுதியும், தண்டுப்
பகுதியின் உட்கூடும் நன்கு வெயிலில் காய
வைத்து அதிலிருந்து உருவாக்கப்பட்ட திரியை
விளக்கு வழிபாட்டிற்காக பயன்படுத்தினால்
முன்வினைக் கர்ம பாபங்கள் நீங்கும். பிறவித்
தளை நீங்கி மறுபிறப்பற்ற வாழ்வு நிலைத்து
நின்று வழிபடுவோர் வாழ்வை வளப்படுத்தும்.

பஞ்சுத்திரி : பொதுவாக பருத்தியினால்
திரித்து எடுக்கப்படுகின்ற திரி
விளக்குகளுக்கு தீபத்திரியாக
பயன்படுத்தப்படுகிறது.

பெரும்பான்மையானோர்
பருத்திப் பஞ்சினைத்தான் திரியாக
பயன்படுத்துகின்றனர். இது தெய்வ குற்றம்,
பிதுர்களால் ஏற்பட்ட சாபம், வம்சாவழிப்
பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்திக்
கொடுக்கக்கூடியது. எனவே இந்த திரியால்
விளக்கேற்றுவது மிகுந்த பயன்தரும். நல்ல
பலன்களை பஞ்சுத்திரி ஏற்படுத்தும்.

வெள்ளைத்துணி திரி : வெள்ளைத் துணியாக
எடுத்து, அதைத் திரியாகத் திரித்து
பயன்படுத்துவதால் பலவித உத்தமமான
பலன்களை பெற முடியும். அதிலும்
வெள்ளைத் துணியை பன்னீரில் நனைய
வைத்து, பின் அதைக் காய வைத்து திரியாக
திரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது
மேலும் பலன் தரக்கூடியதாகும்.

சிவப்பு வர்ணத் துணி திரி : சிவப்பு
துணியிலிருந்து திரிக்கப்பட்ட திரியானது விளக்கெரிக்க தீப தரிசன வழிபாடு செய்ய
பயன்படுத்தப்பட்டால் திருமண தடை நீங்கும்
மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பிறக்கும்
பேறு உண்டாகும். மஞ்சள் துணியாலான திரி :
இத்துணியாலான திரிக்கு தனி மகத்துவம்
உண்டு. எதிலும் வெற்றி பெற விரும்பும்
அன்பர்கள் பயன்படுத்த வேண்டிய திரி இது.

தேவியின் பூரண அருள் நமக்கு கிடைக்க இந்த
திரி பயன்படுத்தப்படுகின்றது. மனிதனுக்கு
ஏற்படும் வியாதிகள் தீரவும், செய்வினைகள்
நீங்கவும், காற்று சேட்டைகள் நீங்கி நலம்
பெறவும், எதிரி பயம் நீங்கவும். தம்பதிகள்
ஒற்றுமை ஓங்கவும் இது மிகவும் பயன்படும்
திரி எனலாம்.

வாழைத்தண்டின் நாரினால் ஆன திரி : வாழைத்தண்டினை நன்கு காயவைத்து
அடித்து பஞ்சு போலக்கி பின்பு அதனை
திரியாக எடுத்து விளக்கெரிக்க
பயன்படுத்தலாம். இது முன்னோர்களால்
ஏற்பட்ட சாபம், தெய்வ காரியங்களில் ஏற்பட்ட
பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் மனசாந்தி,
குடும்ப அமைதி, குழந்தைப்பேறு
ஆகியவற்றை ஏற்படுத்தி தரக்கூடியது.

வெள்ளெருக்கந்திரி : வெள்ளெருக்கம்
பட்டையை ஊறவைத்து பிறகு காயவைத்து
அடித்து நாராக மாற்றித் திரியாகத் திரித்து
விளக்கிற்கு பயன்படுத்தினால்
செல்வச்செழிப்பு உண்டாகும். துர் ஆவிகளால்
பாதிக்கப்பட்டவர்களை அத்துன்பத்திலிருந்து
காப்பாற்றும் பிள்ளைகளின் நல்வாழ்வு
நீடிக்கும்.

விளக்கேற்றும்போது சொல்ல வேண்டிய
ஸ்லோகம் கீடா: பதங்கா:மசகாச்ச
வ்ருக்ஷõ:ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜாபவந்தி
நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!!

பொருள்:
புழுக்களோ, பறவைகளோ அல்லது
கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை
என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும்
பூமியிலும் எத்தனை வகையான
ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த
குலத்தினனோ யாரானாலும் சரி…இந்த
தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய
சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும்.

இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த
வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.

‘விளக்கினை ஏற்றி வெளியை
அறிமின்விளக்கினின் முன்னே வேதனை
மாறும்விளக்கை விளக்கும் விளக்கு
உடையார்கள்விளக்கில் விளங்கும் விளக்காவர்
தாமே!

English summary :Is there such a thing as home lighting load? Information to know everyone!