பயணிகள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள தவறுவதற்கு ரயில்வே துறை பொறுப்பேற்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் ஒருவருக்கு ரயில்வே துறை 1 லட்சம் தர வேண்டும் என தேசிய நுகர்வோர் குறைதீர் குழு கூறியதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இதனை தெரிவித்துள்ளது.
தொழிலதிபர் ஒருவர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம், தனது ரயில் பயணத்தின்போது ரூ. 1 லட்சத்தினை இழந்துவிட்டதாக முறையிட்டுள்ளார். தான் இழந்த பணத்தை ரயில்வே துறை மீட்டுத் தர வேண்டும் எனவும் அவர் முறையிட்டுள்ளார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அசானுதீன் அமனுல்லா தலைமையிலான அமர்வு கூறியதாவது: இந்த திருட்டில் ரயில்வே துறையிடம் குறைபாடு உள்ளது எனக் கூறுவதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. பயணி ஒருவர் தனது உடைமைகளை பாதுப்பாக வைத்துக் கொள்ள தவறுவதற்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்க முடியாது என்றனர்.
தேசிய நுகர்வோர் குறைதீர் குழு தொழிலதிபர் சுரேந்தர் போலாவுக்கு ரயில்வே நிர்வாகம் 1 லட்சம் வழங்கக் கோரிய உத்தரவை ரயில்வே நிர்வாகம் மேல்முறையீடு செய்ததில் இந்த சுப்ரீம் கோர்ட் அமர்வு இவ்வாறு தெரிவித்துள்ளது.