புத்தாண்டு பலன்கள் 2025

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டில் நாம் புதிய நம்பிக்கையுடனும், தெம்புடனும்தான் அடியெடுத்து வைக்கிறோம். ஆனால், பல சமயங்களில் நாம் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று என்பது போல் ஒவ்வொரு ஆண்டும் நமக்கு ஏதாவது அனுபவ பாடத்தை கற்றுதருகிறது. அடிபட்டு மிதிப்பட்டு நாம் தெளிவதைவிட, ஆண்டின் துவக்கத்திலேயே, எதிர்வரும் ஆண்டு நம் வாழ்வில் என்னவெல்லாம் மாற்றங்களை தரப்போகிறது, ஆண்டின் எந்தெந்த மாதங்களில் நல்லது நடக்கும், எப்பொழுதெல்லாம் கவனமுடன் இருக்க வேண்டுமென நடக்கபோவனவற்றை முன்கூட்டியே யாராவது சொன்னால் எப்படியிருக்கும்? இதுதான் புத்தாண்டு பலன்கள் 2025 நிகழ்ச்சியின் நோக்கம். 12 ராசிக்காரர்களுக்கும் புதிதாக பிறக்கும் 2025 எப்படியிருக்கபோகிறது என்பதையும், உலகத்துக்கும், இந்தியாவுக்கும், நம் மாநிலத்துக்கும் 2025 குதூகலம் தரும் ஆண்டாக அமையுமா என்பது பற்றியும், 2025ல் உலகம் சந்திக்கபோகும் இயற்கை பேரிடர்கள் குறித்தும், திரைத்துறைக்கு 2025 வெற்றிகரமான ஆண்டாக இருக்குமா என்பது பற்றியும் பிரபல ஜோதிட வல்லுநர்களான நங்கநல்லூர் பஞ்சநாதன், ஹரீஷ்ராமன், நாகை சுந்தரமூர்த்தி, பீமராஜா ஐயர் ஆகியோர் துல்லியமாக கணித்துச் சொல்லவிருக்கின்றனர். இந்நிகழ்ச்சி ஜனவரி 1, புத்தாண்டன்று காலை 6.30 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

 

 ‘எல்லாமே சினிமா’

மண் மணம் மாறாமல் கதைக்கு உயிர் ஊட்டிய இயக்குனர் கஸ்தூரிராஜா தன்னுடைய திரை பயணத்தை ஜெயா டிவி நேயர்களுக்கு தான் பயணித்த நடிகர் நடிகைகளுடன் உணர்வுபூர்வமாக தன்னுடைய சினிமா அனுபவத்தை பகிர்ந்து கொண்டும் இளம் இயக்குனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தும் தன்னுடைய திரை பயணத்தை பகிர்ந்த நிகழ்ச்சி “எல்லாமே சினிமா தான்” நிகழ்ச்சி வரும் புத்தாண்டு தினத்தன்று பிற்பகல் 1:30 மணிக்கு உங்கள் ஜெயா டிவியில்  காணத்தவறாதீர்கள்.

                                                                                                               “நான் விக்ரம்”

மாறுபட்ட நடிகர், நம் இதயம் வென்ற ‘சியான் விகரம்’ தன் திரை அனுபவங்களையும், தன் மனதிற்கு நெருக்கமான நினைவுகளைப் பற்றி பகிர்ந்து கொள்ளும், ஒரு புதுமையான நிகழ்ச்சி “நான் விக்ரம்” புத்தாண்டு தினத்தன்று பிற்பகல் காலை 9:00 மணிக்கு உங்கள் ஜெயா டிவியில்  காணத்தவறாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *