ஜெயா டிவியில் நாள்தோறும் காலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘அருள் நேரம்’. இதில் இடம்பெறும் ஒரு பகுதி ‘அர்த்தமுள்ள ஆன்மீகம்’. நம் அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனையோ சாஸ்திர சம்பிரதாயங்களை கடைபிடித்து வருகிறோம். வீட்டில் பெரியவர்கள் சொல்கிறார்கள் என்பதால் அவற்றை பின்பற்றுகிறோமே தவிர, நம் பலருக்கும் அவற்றின் உண்மையான அர்த்தமும், சாராம்சமும் தெரிவதில்லை.
ஒவ்வொரு பண்டிகையும் ஏன் கொண்டாடப்படுகிறது, சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், ஏகாதசி போன்ற விரத நாட்களின் மகத்துவம் என்ன, ராகு காலம் – எமகண்டம் நேரங்களில் எவற்றையெல்லாம் செய்யலாம் – எவற்றை தவிர்க்க வேண்டும் என நம் மனதில் எழும் ஆன்மீகம் தொடர்பான கேள்விகள் அனைத்துக்கும் இந்நிகழ்ச்சியின் வாயிலாக, அனைவருக்கும் புரியும்படி எளிய நடையில் விளக்கமளிக்கிறார் திரு.ஹரிபிரசாத் ஷர்மா.