ஜெயா டிவியில் செப்டம்பர் 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள்:
“சிறப்பு பட்டிமன்றம்”
ஜெயா தொலைக்காட்சியில் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு “சிறப்பு பட்டிமன்றம் “ காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது .
“வாழ்வில் வெற்றிபெற பெரிதும் தேவை பணிவா ?? துணிவா?? “, என்ற தலைப்பில், சொல்லின் செல்வர் திரு. மணிகண்டன் தலைமையில் வாழ்வில் வெற்றிபெற துணிவு தான் முக்கியம் என்ற விவாதத்தை முன் வைக்கும் இளம் பேச்சாளர்கள். இலக்கிய இளவல் திரு.தாமல் கோ சரவணன், இன்சொல் இளவரசி திருமதி அக்சயா, நற்றமிழ் நாவலர் திரு.காளிதாஸ் பணிவு தான் முக்கியம் என்ற வாதத்தை முன்வைக்கும் நல்லாசிரியர் திரு.ரவிக்குமார், இசைக்கலைமணி ராஜபாளையம் திரு.உமாசங்கர், இன்சொல் இளவல் திரு.நாராயண கோவிந்தன் பங்குபெற்று தன் பேச்சால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் “சிறப்பு பட்டிமன்றம்”.
“அதுவா? இதுவா? “
ஜெயா டிவி யில் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி “அதுவா? இதுவா? “
சின்னத்திரை பேச்சாளர் சந்தியா தொகுத்து வழங்கும் விவாத நிகழ்ச்சி, “திருமணமான ஆண்களுக்கு விரும்புவது வேலைக்கு செல்லும் பெண்களா ? வீட்டிலிருக்கும் பெண்களா??” என்ற தலைப்பில் பொது மக்கள் கலந்து கொள்ளும் சிந்திக்க வைக்கும் விவாத நிகழ்ச்சி “அதுவா? இதுவா? ”
இதில் சின்னத்திரை காமெடி நடிகர் திரு நாஞ்சில் விஜயன் , சின்னத்திரை நடிகை வைஷாலி தணிகா ,மற்றும் மனநல மருத்துவர் திரு.அசோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தன கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள்கின்றனர்..
“என் ஸ்டைல்”
ஜெயா தொலைக்காட்சியில் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சி “என் ஸ்டைல்”.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பவித்ரா உடன் பரம்பொருள் பட கதாநாயகன் அமிதாஷ் பிரதன் கலந்து கொண்டு பல சுவாரசியமான விஷயத்தை நம்முடன் பகிர்ந்த ஒரு கலகலப்பான நேர்காணல் “என் ஸ்டைல்”.