பிரபலநகைச்சுவை நடிகர் விவேக்கின் 13 வயது மகன் பிரசன்னாகுமார் மூளைக்காய்ச்சல் காரணமாக நேற்று முன் தினம் மாலை மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு நேற்று முடிந்துள்ள நிலையில் மகனை பிரிந்து வாடும் விவேக்கின் குடும்பத்தினர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் கடிதம் மூலம் ஆறுதல் கூறியுள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: “தங்களின் அன்பு மகன் பிரசன்னகுமார் 29.10.2015 அன்று உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தினால் ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள போதிலும், இந்தத் துயரத்தை தாங்கி கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் அளிக்க வேண்டும் என்றும், பிரசன்னகுமாரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். பிரசன்னகுமாரை இழந்து வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.”
திமுக தலைவர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: ‘நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னகுமார் திடீரென்று மறைந்த செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மகனை இழந்து வாடும் விவேக் மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்
English summary-CM Jayalalithaa condoles death of actor Vivek’s son