சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் நேற்று தணிக்கை செய்யபட்டது. தணிக்கை அதிகாரிகள் இந்த படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால் இந்த படம் தமிழக அரசின் வரிவிலக்கை பெற தகுதி பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 152 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 32 நிமிடங்கள் ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தின் தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படம் உலகம் முழுவதும் ஜூலை 22ஆம் தேதி வெளியாகும் என்று அவர் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலாய் ஆகிய மொழிகளில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது. ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், ஜான்விஜய், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார்.
English Summary : Kabali Censor information and Running time