நேற்று ஒரே நாளில் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘வை ராஜா வை, விஜய் ஆண்டனி நடித்த ‘இந்தியா பாகிஸ்தான்’ ஆகிய மூன்று படங்கள் சென்சார் செய்யப்பட்டது. இந்த மூன்று படங்களுக்குமே சென்சார் அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால் மூன்று படங்களின் தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, கே.பாலசந்தர் உள்பட பலர் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘உத்தம வில்லன்’ திரைப்படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மே 1ஆம் தேதி சூர்யாவின் மாஸ் திரைப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று சென்சார் செய்யப்பட்டு ‘யூ’ சர்டிபிகேட் பெற்றுள்ள மற்றொரு படமான ‘வை ராஜா வை’ படத்தை ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். இந்த படத்தில் கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்சி, டேனியல் பாலாஜி, விவேக் உள்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 24ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நான், சலீம் படங்களின் வெற்றிகளை அடுத்து விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘இந்தியா பாகிஸ்தான்’ திரைப்படம் ஏப்ரலில் ரிலீஸாகவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

English Summary : Kamal , Aishwarya , Vijay Antony pictures and details of the sensor