இளையதளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ‘துள்ளான மனமும் துள்ளும்’ உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய எழில், சமீபத்தில் கூட ‘வெள்ளக்கார துரை’ என்ற வெற்றிப் படத்தை இயக்கினார். தற்போது விஷ்ணு விஷால் நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்கும் மும்முரத்தில் எழில் உள்ளார்.
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த புதிய படத்தில் இதுவரை விஷ்ணு நடிக்காத புதுவித கெட்டப்பில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து தயாரிக்கப்பட உள்ளதாகவும், முண்டாசுப்பட்டி படத்தில் விஷ்ணுவின் காமெடி நடிப்பில் கவர்ந்துதான் இந்த படத்தில் அவரை புக் செய்ததாகவும் கூறிய எழில், விரைவில் முதல்கட்ட படப்பிடிப்பை கும்பகோணத்தில் தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் நாயகியாக நடிக்க, சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ரஜினிமுருகன்’ படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் மற்றும் சமீபத்தில் வை ராஜா வை’ மற்றும் காஞ்சனா 2′ ஆகிய இரண்டு ஹிட் படங்களில் நடித்த டாப்சி ஆகியோர்களிடம் எழில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
English Summary : Vishal, vishnu booked as actors and Keerthi Suresh, Tapsee paanu as actress in Ezhil’s next untitled comedy film.