நடப்பு ஐபிஎல் தொடரின் 2-வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றுள்ளது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரராக டெல்லி அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் மற்றும் முன்ரோ களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய கவுதம் காம்பீர் 42 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். அவர் அடித்த 5 பவுண்டரிகள் 1 சிக்ஸரும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன. ஆனால் எதிரபாராத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் அடுத்தெடுத்த களமிறங்கிய பெரியதாக அணிக்கு பலம் சேர்க்கவில்லை. ஆர்.ஆர். பந்த் 28 ரன்களும், மோரிஸ் 27 ரன்களும் எடுத்து வெளியேறினர். 20 ஓவர்களு முடிவுற்ற நிலையில் டெல்லி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஷர்மா, முஜீப் உர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கே.எல்.ராகுலும் எம்.ஏ. அகர்வாலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ராகுல் நான்குபுறமும் பந்தை பறக்கவிட்டார். அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் அரைசதத்தை அடித்தார். இதில் 4 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த பெருமையை ராகுல் பெற்றுள்ளார். ஆனால் பவுல்ட் வீசிய பந்தை தூக்கி அடிக்க முயன்று ஷமியிடம் கேட்ச் கொடுத்து 51 ரன்களில் வெளியேறினார். பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய யுவராஜ் சிங் 12 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேற கருண் நாயர் களமிறங்கினார். 33 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார். இறுதிவரை விளையாடிய டேவிட் மில்லர் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். 18.5 ஓவர்களிலேயே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 167 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பஞ்சாப் அணி பதிவு செய்துள்ளது.
English Summary: kings xi punjab won by 6 wickets.