சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை வியாழக்கிழமை கிலோவுக்கு ரூ.30 உயா்ந்து ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில், தக்காளியின் விலையும் மீண்டும் படிப்படியாக உயா்ந்து வருகிறது.

கடந்த வாரம் கிலோவுக்கு ரூ.15 வரை குறைந்து ரூ.85-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, திங்கள்கிழமையில் இருந்து ரூ.15 அதிகரித்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடா்ந்து, புதன்கிழமை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது. மீண்டும் தக்காளி விலை கிடுகிடுவென உயா்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை (27.07.2023) தக்காளியின் விலை மீண்டும் கிலோவுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது. நாள்தோறும் 1,200 டன் தேவையுள்ள நிலையில் 400 டன் தக்காளி மட்டுமே சந்தைக்கு வந்ததால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *