மத்திய அரசிற்கு உட்பட்ட மத்திய மருந்துகள் ஆய்வு நிலையத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 6 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : மத்திய மருந்துகள் ஆய்வு நிலையம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : திட்ட உதவியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 06
கல்வித் தகுதி : பி.எஸ்சி பயோடெக்னாலஜி, எம்.எஸ்சி ஆர்கானிக் வேதியியல், எம்.பார்மசி
முன் அனுபவம் : தேவை இல்லை
வயது வரம்பு : 28 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,000 முதல் ரூ.28,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cdri.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 17.01.2019 – 18.01.2019 நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : CSIR-Central Drug Research Institute, B.S. 10/1, Sector 10, Jankipuram Extension, Sitapur Road, Lucknow – 226031.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.cdri.res.in/pdf/recruitment/advertisement2019projectstaff.pdf அல்லது www.cdri.res.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.