ஏழை மாணவர்களின் உயர்கல்வியையும் அவர்களுடைய ஆராய்ச்சி அறிவையும் ஊக்குவிக்கும் வகையிலும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) போன்ற பல்வேறு அமைப்புகள் வாயிலாக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அவ்ர்களுக்கு உதவித்தொகையை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு இந்த உதவித்தொகையை பெறுபவர்கள் தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2015-16ஆம் கல்வியாண்டுக்கு கல்வி உதவித் தொகைகளைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏற்கெனவே முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் மேம்பட்ட ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க டிசம்பர் 31-ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்திருப்பதாக யுஜிசி அறிவித்துள்ளது.
பெண்களுக்கான முதுநிலை ஆராய்ச்சி உதவித் தொகை, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான முதுநிலை ஆராய்ச்சி உதவித் தொகை, ஓய்வு பெற்ற பேராசிரியர்களுக்கான ஆராய்ச்சி உதவித் தொகை, சமூக அறிவியல் – மானிடவியல் பிரிவுகளுக்கான மேம்பட்ட ஆராய்ச்சி உதவித் தொகை ஆகிய திட்டங்களில் சேருவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டங்களின் கீழ் மாதம் ரூ. 38,800 உதவித் தொகை வழங்கப்படுவதோடு, மூன்றாம் ஆண்டு முதல் மாதம் ரூ. 46,500 உதவித் தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிஎச்.டி. முடித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
english summary-Last date for application for Central Research Scholarship extended till 31st December