ஜெயா டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 7:00 மணிக்கு ஒளிபரப்பாகும் ’காலை மலர்’ நிகழ்ச்சியில் இடம்பெறும் ஒரு பகுதி ‘மாத்தி யோசி’ காலை 8:40 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் நம் பலருக்கும் படித்த படிப்புக்கும், செய்யும் வேலைக்கும் தொடர்பிருப்பதில்லை. ஏதோ ஒன்றை படிக்கிறோம், அதற்கு தொடர்பே இல்லாத ஏதோ ஒரு அலுலகத்தில் வயிற்றுப் பிழைப்புக்காக வேலை பார்க்கிறோம். இதனால் பலருக்கும் தாங்கள் செய்யும் வேலையில் முழு திருப்தி இருப்பதில்லை.அப்படிப்பட்ட சிலர், வழக்கமான பாணியில் இருந்து மாற்றி யோசித்து, தாங்கள் விரும்பிய ஏதேனும் துறையில் மாற்று சிந்தனையுடன் கூடிய start up நிறுவனங்களை தொடங்கி அதில் வணிக ரீதியாக வெற்றியும் பெறுகின்றனர்.
வரும் வாரத்தில் ஐக்கிய அமீரகத்தில் பல்வேறு பணிகளில் விளங்கும் திருமதி. ஸ்ரீ தேவி சிவானந்தம் புதுமை தமிழச்சி இயக்கம் நிறுவனர் துபாய்.வெளிநாடு வாழ் தமிழ் குழந்தைகள் வெளிநாட்டில் உள்ள பள்ளியில் படிக்க இட ஒதுக்கீடு பெற்று தந்தவர்.வேலைக்காக சில போலி ஏஜென்சி மூலம் சென்று அங்கு ஏமாந்து வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாத தமிழர்களுக்கு அங்கேயே வேலையும் வாங்கி கொடுத்து அவர்களது வாழ்வை உயர்த்தியுள்ளார். சில தமிழர்களுக்கு சொந்த ஊருக்கு செல்வதற்கு பாஸ்போர்ட் விசா அனைத்தையும் பெற்றுத்தந்து சொந்த ஊருக்கு அனுப்பியும் வைத்துள்ளார்.வெளிநாட்டில் இருந்து கொண்டே உலக அளவில் எங்கு யாருக்கு ரத்தம் தேவையோ அதையும் ஏற்பாடு செய்து கொடுக்கும் செயலையும் அவரது புதுமை தமிழச்சி அமைப்பு செய்து வருகிறது.