ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 07:30 மணிக்கு ஒளிபரப்பாகும் மங்களகரமான நெடுந்தொடர் “மனதில் உறுதி வேண்டும்” நடிகர் ராம்ஜி,நடிகை ப்ரீத்தி , நடிகை ஐஸ்வர்யா, நடிகர் சஞ்சய் குமார் , பிக் பாஸ் மதுமிதா மற்றும் பலர் இந்நெடுந்தொடரில் பயணித்துள்ளனர் .இத்தொடரின் கதைக்கரு குடும்பங்கள் கொண்டாடும் விதமாக பல திருப்பங்களும் கருத்துகளையும் கொண்டது .
இரண்டு தங்கையுடன் பிறந்த நடுத்தர வர்க்கப் பெண் பாரதி ,தன் குடும்பத்தை கஷ்டத்தில் இருந்து மீட்டு கொண்டு வர நினைக்கும் கதாநாயகி , அவளின் தந்தை பழனியப்பன் இருதய நோயாளி , இதையறிந்த பாரதி தன் அப்பாவின் அறுவை சிகிச்சைக்காக பணத்தை புரட்ட கஷ்டபடுகிறாள்.
சுந்தரத்தின் முதலாவது மனைவியின் மகன் திருநாவு(கதாநாயகன்) இவர் திக்கி பேசும் சுபாவம் கொண்டவர் இவருக்கு வாய் பேச முடியாத பெண்ணை கல்யாணம் செய்ய வேண்டும் என்பதே ஆசை, சுந்திரத்தின் முதல் மனைவி இறந்த பின்னர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுவந்தவர் வைதீஸ்வரி அவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர் , தனது கணவரின் சொத்தை அடைய வேண்டும் என்ற `எண்ணத்துடன் மட்டுமே அவர் இந்த குடும்பத்திற்குள் நுழைந்து இருக்கிறார் ,அனால் அவர் அந்த வீட்டிற்குள் உள்ள அனைவரிடமும் அன்பாக மற்றுமே பழகும் படி நடிக்கிறாள், அதுவும் திருநாவு மேல் அதிக அக்கறை இருக்கும் படி நடந்து கொள்கிறாள்.
ஒரு நாள் கோவிலில் பாரதியை பார்த்த திருநாவு , அவள் வாய் பேச முடியாதவள் என்று எண்ணி அவள் மீது காதல் வயப்படுகிறாள் , ஆனால் பாரதி ஊமை இல்லை , திருநாவு அவள் காதலை அவளிடம் வெளிப்படுத்திய பின்பு அவள் தன வீட்டில் வந்து பேசுமாறு சொல்லி சென்றுவிட்டாள் ,திருநாவு தன் குடும்பத்திடம் அவர் காதலை தெரிவிக்கிறான், பாரதியின் தந்தை பழனியப்பன் , சுந்தரத்தின் நெருங்கிய நண்பர் ஆவர் அதனால் அவர் வீட்டிற்கு சென்று அவரின் மகளை பெண் கேட்கிறார் , பாரதியை வாய் பேச முடியாதவள் போல் நடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அதற்கு பாரதி ஒப்புக்கொள்ளவில்லை.
வைத்தீஸ்வரியின் இரண்டாவது மகன் விக்கி மோகினியை காதலித்து கர்ப்பமாகிறான் , ஆனால் மோஹினியோ தன்னை இப்பொழுதே திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி திருமணம் செய்து கொள்கிறாள் , அனால் விக்கி தன் வீட்டில் இந்த திருமணத்தை மறைக்க சொல்கிறாள். இது எல்லாமே மோஹினியின் திட்டம் , மோஹினி அந்த குடும்பத்தினுள் நுழைந்து அவர்களின் நிம்மதியை கேடுத்து அவர்களின் சொத்தை அடைவதற்கான நோக்கத்துடனேயே மட்டும் இந்த குடும்பத்திற்குள் நுழைகிறாள்
திருநாவை திருமணம் செய்ய பாரதி ஓப்புக்கொள்வாரா??மோகினியின் திட்டம் பலிக்குமா?? உங்கள் ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 07:30 மணிக்கு காணத்தவறாதீர்கள் ..