Marathon-30102015கல்லீரல் நோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த சில ஆண்டுகளாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் வரும் நவம்பர் 14ஆம் தேதி கல்லீரல் நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ‘இரவு மாரத்தான் நிகழ்ச்சி’ ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாரத்தான் நிகழ்ச்சியை சென்னை அப்பல்லோ மருத்துவமனை, ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து நடத்தவுள்ளன. இது குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் கல்லீரல் நோய்கள் துறையின் மருத்துவர் ஆனந்த் காகார், ரோட்டரி சங்கத்தின் சி.ஆர்.ராஜா ஆகியோர் கூட்டாக நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கல்லீரலைப் பாதுகாப்பது, கல்லீரல் நோய்கள் குறித்த விழிப்புணர்வு, உடல் உறுப்பு தானம் உள்ளிட்டவற்றுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த இரவு மாரத்தான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சென்னையில் இரண்டாம் ஆண்டாக நடைபெறவுள்ளது.

நவம்பர் 14-ஆம் தேதி தீவுத்திடலில் இரவு 9 மணிக்கு 3 கி.மீ., 5 கி.மீ., 10 கி.மீ., 21 கி.மீ. ஆகிய நான்கு பிரிவுகளில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் http://lylfnightmarathon.com/ என்ற இணையதளத்தில் கட்டணத்தை செலுத்தி, தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இதுகுறித்த விபரங்களை தெரிந்து கொள்ள lylfnightmarathon@gmail.com என்ற இமெயில் மூலமோ அல்லது +91 90 9498 9498 என்ற செல்போன் எண்ணையோ தொடர்பு கொள்ளலாம்.
English summary-Marathon to create awareness on liver ailments