மாதங்களில் நான் மார்கழி என்றான் கீதையிலே கண்ணன். இப்படி சிறப்பு வாய்ந்த இந்த மார்கழி மாதத்தில் கண்ணனை உருகி ஆண்டாள் பாடிய 30 பாடல்கள் திருப்பாவை என கொண்டாடப்படுகிறது.12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய இந்த நூல் வைணவ பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரதிவ்ய பிரபந்தத்தில் 474 தொடங்கி 503 வரை உள்ள பாடல்களாக இடம் பெற்றுள்ளது.
தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப்பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இந்த மாதத்தில் விடியும் முன்னரே எழும் கண்ணியர் பிற பெண்களையும் துயில் எழுப்பி கொண்டு ஆற்றில் நீராடி இறைவனை துதித்து வழிபடுவர். இதனை பின்னனியாக கொண்டு எழுதப்பட்டதே இந்த நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்பு காலத்தில் இப்பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. இவ்வளவு விஷேசம் நிறந்த திருப்பாவையை மார்கழி மாதம் முழுவதும் காலையில் இல்லம் தோறும் கேட்பது மிகுந்த பலனைத்தரும் என நம்பப்படுகிறது. இந்த திருப்பாவையின் விளக்க உரையை சிங்கப்பூர் திரு. கண்ணன் சேஷாத்ரி அவர்கள் வழங்குகிறார்.
இதன் தொடர்ச்சியாக மாணிக்கவாசகரால் சைவ சமயத்தின் முழுமுதல் கடவுளான சிவபெருமானை குறித்து எழுதப்பட்ட பாடல்களின் சிறப்பு தொகுப்பு திருவெண்பாவை ஆகும். இப்பாடலுடன் திருப்பள்ளி எழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாகக் கொண்டுள்ளனர். இதனை Dr.சுதா சேஷையன் அவர்கள் வழங்குகிறார். இந்த இரு நிகழ்ச்சிகளும் புதுயுகம் தொலைக்காட்சியில் மார்கழி மாதம் முழுவதும் தினந்தோறும் காலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது .