கொரோனா பரவலை தடுக்க புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

நட்சத்திர உணவகங்கள், ரிஸார்டுகள், கோயம்பேடு மார்க்கெட், தியேட்டர், வணிக வளாகம், வீட்டு விஷேசம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் மற்றும் கிருமிநாசினி உபயோகித்தல் உள்ளிட்டவற்றை மக்கள் கடைபிடிக்க வேண்டும். மேலும், புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் சுய கட்டுப்பாடுகளுடன் கொண்டாடுவது நல்லது என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *