கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் எம்.பி.ஏ. எம்.சி.ஏ., எம்.எஸ்சி. தகவல் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியாகிறது.

மேற்கண்ட படிப்புகளின் தேர்வு முடிவுகளை www.ideunom.ac.in, www.unom.ac.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த தேர்வுகளின் மறு மதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள், தாள் ஒன்றுக்கு ரூ.75 கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளம் மூலம் வரும் 25-ஆம் தேதிக்குள் ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

English Summary : The results for MCA and MBA exams which conducted on December is announced in Internet.