சமீபத்தில் சென்னையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடசென்னை தண்டையார் பேட்டையில், பிரம்மா குமாரிகள் நடத்தும் 12 ஜோதிர்லிங்க தரிசனக் காட்சி, கூட்டு தியானம் மற்றும் மருத்துவ முகாமும் நடைபெறவுள்ளது.
1. சோமநாத், 2, விஷ்வநாத், 3. திரியம்பகேஷ்வரர், 4. ஓங்காரரேஷ்வரர், 5. மகாகாலேஷ்வரர், 6. நாகேஷ்வரர், 7. வைத்யநாத், 8. கிருஷ்ணேஷ்வர், 9. பீமா சங்கர், 10. கேதார்நாத், 11. மல்லிகார்ஜுன், 12. இராமேஷ்வர், ஆகிய 12 பெயர்களில் உள்ள சிவலிங்க உருவை வணங்கி தியானம் செய்வதன் மூலமே நமது பாவச்சுமைகள் அழிந்து புதிய உலகமான சொர்க்கம் இப்புவியில் படைக்கப்படும் என கருதப்படுகிறது.
அதுவே இறைவனின் படைப்பில் முதல் யுகமாகும். இந்த உண்மையை இன்றைய இளையதலைமுறையினரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே பிரம்மா குமாரிகள் இயக்கம் மாபெரும் 12 ஜோதிர்லிங்க தரிசனத்தை நடத்தி வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர தேசத்திலும் பல முக்கிய நகரங்களில் சுமார் 112 இடங்களில் இத்தரிசனம் நடந்தேறியுள்ள நிலையில் தற்போது வடசென்னையில் தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தங்கம் மாளிகையில் டிசம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 21ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் நடைபெற உள்ளது.
காலை 8 மணிமுதல் மாலை 9 மணிவரை இந்த ஜோதிர்லிங்கங்களை தரிசனம் செய்யலாம். இங்கு அனுமதிக்காக எந்த கட்டணமும் கிடையாது. இத்தரிசன நிகழ்ச்சியின் கூடவே நடைபெறும் பிற நிகழ்ச்சிகள் பின்வருமாறு…
* இந்த உலக நாடகச் சக்கரம், இறைவன் மற்றும் இராஜயோகம் பற்றிய விழிப்புணர்வு படக்காட்சி
* இறைவனோடு மனம் – புத்தியை இணைய வைக்கும் தியானப் பயிற்சிக்குடில்
* மனிதன் – 5 தத்துவங்கள் – இறைவன் பற்றிய வீடியோ காட்சி
* வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கூட்டு தியானம் (தினமும் காலை 10 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 6 மணிமுதல் 6.30 மணி வரையும் நடைபெறும்)
* வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மருத்துவ முகாம்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் தகவல் அறிய விரும்புபவர்கள் 9940367555 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English summary-Medical camps at flood affected areas in chennai