மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவு இட்டதோடு, நுழைவுத்தேர்வுக்கான தேதியையும் அதே உத்தரவில் தெரிவித்தது. இந்நிலையில் பொது நுழைவுத் தேர்வுக்குப் பதிலாக, மாநில அரசுகள் தனித்தனியாக நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தற்போது கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, உச்ச நிதிமன்ற நீதிபதிகள் ஏ.ஆர்.தேவ், ஏ.கே,கோயல் அமர்வு முன்பு அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹாத்கி புதிய மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நடப்பு 2016-17-ம் கல்வியாண்டிலேயே மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை மே 1 மற்றும் ஜூலை 24 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்துவது என்பது பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் அதுமட்டுமின்றி நேற்றைய உத்தரவில் நிறைய குழப்பங்கள் உள்ளதால் மே 1-ல் நடத்தப்பட வேண்டிய முதல் கட்ட தேர்வை ரத்து செய்துவிட்டு, ஜூலை 24-ல் ஒரே கட்டமாக நுழைவுத் தேர்வை நடத்தலாம் என்றும் அட்டார்னி ஜெனரல் யோசனை தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த புதிய மனுவை இன்று பிற்பகலில் விசாரணைக்கு வரவுள்ளது.

English Summary : Medical entrance exam. New order passed from supreme government.