ஆண் உறுப்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 50 குழந்தைகளுக்கு சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்து குணமாக்கப்பட்டது.
இதுகுறித்து எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை இயக்குனர் சித்ரா அய்யப்பன் செய்தியாளர்களிடம் கூறியபோது, “ஒன்று முதல் ஐந்து வயது வரை உள்ள ஆண் குழந்தைகளில் 500 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் ஆண் உறுப்பு சிதைவு நோய் ஏற்படுகின்றது. இந்த நோய்க்கு இந்த மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளித்து நோய் குணமாக்கப்படுகிறது. இது 100 சதவீதம் பாதுகாப்பானது மற்றும் சிகிச்சைக்கு பின்னர் எவ்வித பாதிப்பும் இருக்காது.
தனியார் மருத்துவமனைக்கு நிகராக அரசு மருத்துவமனையிலும் உயரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை பொதுமக்கள் புரிந்து கொண்டு இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த பேட்டியின்போது துறைத் தலைவர் செந்தில்நாதன், டாக்டர் வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
English Summary: medical insurance program for 50 male children have specialized surgical and medical record in Egmore