கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர் “கெளரி”. இந்த தெய்வீகத் தொடருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது துர்கா ரூபத்தில் வந்திருக்கும் கனகா ஆவுடையப்பனின் குடும்பத்தையே ஆட்டிப் படைக்கிறாள். துர்காவை அழிக்க ஆவுடையப்பன் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியையும் துர்கா பொடிபொடியாக்க, ஆவுடையப்பனின் குடும்பமே அதிர்ச்சியும், பயமும் கொள்கிறது. எனவே, துர்காவின் நடவடிக்கையில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க ஆவுடையப்பன் பல முயற்சிகளை மேற்கொள்கிறார்.
இந்த நிலையில், நடு இரவில் வெளியே செல்லும் துர்காவை, அகிலா, காவேரி, வீணா பின்தொடர்ந்து செல்கிறார்கள். மறுபுறம் துர்கா யார் என்பதை தான் கண்டுபிடிப்பதாக, காளி பூஜை செய்கிறான் காலன். இதற்கிடையே, துர்காவை தள்ளிவிட்டு கொலை செய்ய அர்ஜூன் திட்டம் போட என தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. இறுதியாக, அகிலா, காவேரி, வீணாவுக்கு, துர்கா ஏன் நடு இரவில் வெளியே சென்றாள் என்கிற உண்மை தெரிந்ததா? காலன், காளி பூஜையின் மூலம் துர்கா யார் என்கிற உண்மையை கண்டுபிடித்தானா? என்கிற பரபரப்போடும், திகிலாகவும் தொடர் நகர்ந்து வருகிறது.