சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் மினி பஸ்களின் தேவை எழுந்து வரும்நிலையில், முக்கிய அறிவிப்பு ஒன்றினை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தன்னுடைய அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள பக்கத்திலும் பதிவிட்டுள்ளது. கடந்த 1997ம் ஆண்டு, தமிழகத்தில் மினி பஸ் சேவைகள் கொண்டுவரப்பட்டன.. இந்த சேவையானது, பொதுமக்களின் அமோக ஆதரவையும் பெற்றது. குறிப்பாக, கிராமப்புற மக்களின் சிரமத்தை போக்குவதாக அமைந்தது.
புறநகர்: நகர்ப்புறத்துக்கு நடந்து செல்வது என்பதே மிகப்பெரிய பிரச்சனையாக இருந்துவந்த நிலையில், இந்த மினி பஸ்கள் கிராமப்புற மக்கள், புறநகர்ப்பகுதி மக்களுக்கு சிறப்பான வசதியை தந்தது.. இதற்கு பிறகு, இந்த சேவை நிறுத்தப்பட்டு, மீண்டும் சென்னைக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது. இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு, புதிய மினி பஸ் திட்டம் வரைவு அறிக்கை – 2024 தயாரித்து வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் மினி பஸ் சேவையை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேனாம்பேட்டை: அந்த வரைவு அறிக்கையில், “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டையார் பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் ஆகிய பகுதிகளுக்கு மட்டும் இந்த மினி பஸ் சேவை வழித்தடம் வழங்கப்படாது. அதேசமயம், சென்னை மாநகராட்சியுடன் 2011-ம் ஆண்டு இணைந்த பகுதிகளான திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு மினி பஸ் சேவை அளிக்கப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் எந்ததெந்த வழித்தடங்களில் மினி பஸ்களுக்கான அனுமதியை வழங்கலாம் என்பதனை போக்குவரத்து துறையின் ஆர்டிஓக்கள் முடிவு செய்வார்கள்.அதிகபட்சமாக 25 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்க அனுமதி உண்டு” என்பது முதல் பல்வேறு விஷயங்கள் அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.
தாம்பரம்: இந்நிலையில், தாம்பரத்தில் புதிய வழித்தடத்தில் மினி பஸ் இயக்கப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தற்போது அறிவித்துள்ளது. சென்னையில் பயணிகளின் வசதிக்காக புதிய வழித்தடம் உருவாக்குதல், வழித்தடத்தை நீட்டித்தல் போன்றவற்றில் மாநகர போக்குவரத்துக் கழகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.. அதேபோல, புதிய பேருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், புதிய வழித்தடம் குறித்த அறிவிப்பு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல, புதிய பேருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், புதிய வழித்தடம் குறித்த அறிவிப்பு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வழித்தடம் : மேற்கு தாம்பரத்தில் இருந்து எஸ்55டபிள்யு (S55W) என்னும் வழித்தடத்தில் இயக்கப்படும் சிற்றுந்து பெருங்களத்தூர், எஸ்எஸ்எம் நகர், கேம்ப் ரோடு, கிழக்கு தாம்பரம் வழியாக பயணித்து, மீண்டும் மேற்கு தாம்பரத்தை வந்தடைகிறது. இந்த பேருந்து காலை 5.15, 7.40, 10.25, பிற்பகல் 1.10, 3.45, மாலை 6.25 ஆகிய நேரங்களில் புறப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.