southern-railway-261115-1
சென்னையில் செயல்பட்டு வரும் மின்சார ரயிலில் வாடிக்கையாக பயணம் செய்யும் பயணிகளுக்கு வசதியாக ஆண்ட்ராய்டு மொபைல் போன் மூலம் காகிதமில்லா சீசன் டிக்கெட் விற்பனை கடந்த சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும், இந்த புதிய திட்டம் காரணமாக ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மின்சார ரெயில் பயணிகளுக்கான காகிதம் இல்லா ‘சீசன்’ டிக்கெட் விற்பனையை கடந்த 5-ந் தேதி தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தியது. மாதந்தோறும் மின்சார ரெயிலில் பயணிக்கும் பயணிகள், ‘ஆண்டிராய்டு’ செல்போன்கள் மூலமாக ‘சீசன்’ டிக்கெட்டை செல்போன் மூலமாக பெற்றுவருகின்றனர். அதன்படி செல்போன் மூலமாக பதிவு செய்து நாள் ஒன்றுக்கு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இது 200 சதவீதம் உயர்வு ஆகும். 6 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் தற்போது ‘சீசன்’ டிக்கெட் பயன்படுத்திவருகின்றனர். வருங்காலங்களில் செல்போன் மூலமாக ‘சீசன்’ டிக்கெட் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English summary-200% growth in the number of trips booked through mobile phones per day says southern railway