சென்னை: கஜா புயல் கரையை கடந்தாலும் அதன் தாக்கத்தினால் சில மாவட்டங்களில் மிகுந்த கனமழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.

கஜா புயல் கரையை கடந்தபோது, வலுவான சூறாவளியுடன் கரையை கடந்ததாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து உள்ளளார். மேலும், சூறாவளியின் தாக்கம் கடுமையாக இருந்தாகவும் கூறி உள்ளார்.

கஜா புயலின்போது ஏற்பட்ட சூறாவளி மணிக்கு 100 கிமீட்டர் வேகத்தில் காற்று வீசியது என்றும், கஜா புயல் கரையை கடக்கும் சமயத்தில், நாகை மாவட்டம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்காலில் காற்றின் வேகம் 100 கி.மீ வேகத்தில் இருந்தது. அதேவேளையில் கஜா கார கடந்த வேதாரண்யத்தில் காற்றின் வேகம் 110 முதல் 120 கி.மீ அளவுக்கு இருந்ததாகவும் தெரிவித்து உள்ளார்.

அதிராமப்பட்டினத்தில் 111 கி.மீ, நாகப்பட்டினம் 100 கி.மீ, காரைக்கால் 92 கி.மீ வேகத்தில் இருந்தாகவும் கூறி உள்ளார். அதேவேளையில் சென்னையை ஏற்கனவே தாக்கிய வார்தா புயலின்போது, காற்றின் வேகம் சென்னை மீனம்பாக்கத்தில் 122 கி.மீ, நுங்கம்பாக்கத்தில் 144 கி.மீ, எண்ணூர் பகுதியில் 89 கி.மீ வேகத்தில் காற்று வீசியதையும் குறிப்பிட்டு ள்ளார்.

தற்போது கஜா கரையை கடந்தாலும் அதன் தாக்கத்தினால் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள வெதர்மேன், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டத்தின் வடபகுதி, திருச்சியின் தெற்கு பகுதி, கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை தேனி மாவட்டங்களில் சில பகுதிகளில் பலமான காற்று வீசும் என்றும் மழையும் தொடரும் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் கொடைக்கானலில் மிக அதிகமான அளவில் கனமழை பெய்யும் என்றும் கூறி உள்ளார். அதுபோல திருச்சி, கரூ, திருப்பூர், வால்பாறை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.

அதைத்தொடர்ந்து இன்று மாலை கஜா புயல் கேரளாவை நோக்கி செல்லும் என்றும் கூறி உள்ளார். கஜா புயலின் காரணமாக கேரளாவில் முன்னார், ஈடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆழப்புலா மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கோடிட்டு காட்டி உள்ளார்.’

மேலும், சென்னை, செங்கல்பட்டு, ஈசிர் போன்ற பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறி உள்ளார். கஜா புயல் கரையைக் கடந்தபோது, அதிகபட்சமாக, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மணிக்கு 111 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசியதாகவும், கஜா புயல் மேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *